ஒரு காலத்தில் நண்பர்கள் பரிந்துரை செய்யும் படங்களை நாம் பார்ப்போம். என்னைப் பொறுத்தவரை அது தான் சிறந்த முறை. அவர்கள் நம்மை அறிந்ததால் நாம் அவர்களை அறிந்ததால் (ஓரளவிற்காவது) பரிந்துரை செய்யப்படும் படத்தின் மீது 'சரியான எதிர்பார்ப்புடன்' தான் செல்வோம். அதனால் பெரிதும் சேதமோ/வியப்போ வரப்போவதில்லை. 'சித்திரம் பேசுதடி' என் நண்பனின் பரிந்துரையில் தான் பார்த்தேன். ரசித்தேன். அவர்களுக்கு திருமணம் ஆகும் முன் சரியாக இருக்கும். அவர்களுக்கு திருமணமாகி விட்டால் அவர்களுடைய பரிந்துரைகளை நம்பாமல் இருப்பது நலம் என்பது என் கருத்து. நான் எல்லா படங்களையும் பார்ப்பதில்லை, குறிப்பாக நான் செலவழித்து படம் பார்க்க வேண்டுமென்றால்.
எதைப் பார்ப்பது என்று நான் தேர்வு செய்யும் முறை விந்தையாகக் கூடத் தோன்றலாம். எங்கு பார்ப்பது என்பதும் ஓரளவிற்கு முக்கியம். நான் பெங்களூருவில் இருந்த போது முதல் நாள் முதல் காட்சி என்றால் பார்ப்பேன். ஏனென்றால் அங்கு படங்களை கத்தரிக்கும் ('super edit') கேவலமான பழக்கம் உண்டு, நான் பார்த்த திரையரங்குகளிலாவது :x 'சுப்பிரமணியபுரம்' நடிப்பவர்களின் தாடியைப் பார்த்து முடிவு செய்தேன். 'மதராசப்பட்டினம்' நான் பார்க்கவேண்டும் என்று நினைத்தது நான் பார்த்த காட்சிகளில் ஏமியும் சரி, கொச்சின் ஹநீபாவும் சரி நன்றாக நடித்தது போல் தோன்றியது. தமிழில் என்றுமே துணை நடிகர்கள் அற்புதமாக நடிப்பார்கள். பல நேரங்களில் அவர்களால் தான் பல படங்கள் சிறப்பாக இருக்கும். இயக்குனர்கள் பொறுத்தவரை முதல் படங்களைத் தவிர்ப்பேன், பல இயக்குனர்கள் ஒரு கதை/படம் இயககுனராகிவிடுகிறார்கள். நம்முடைய எதிர்பார்ப்பும் பொய்த்துவிடுகிறது. உ-ம் அஞ்சாதே. நான் பார்த்த முதல் பாலா இயக்கிய படம் 'பிதாமகன்'. எனவே இயக்குனர்கள் பேசுவதை வைத்துக் கொண்டு தான் தற்போது முடிவு செய்கிறேன்.
பிரபு சாலமன் பொறுத்தவரை 'கொக்கி' மற்றும் 'லீ' படங்களின் கதை பற்றி படித்த போதே மாற்று சிந்தனையாளரோ (different line of thought) என்று நினைத்தேன். குறிப்பாக அவர் கதைக்களங்கள் எளிமையாக இருந்தது. ஆனால் 'கிங்' அவருடைய படம் என்பதறிந்து கொஞ்சம் ஜகா வாங்கினேன். சமீபத்தில் பாலா அவரைப் புகழ்ந்து பேசிய போது முடிவெடுத்தேன் 'மைனா' பார்த்தே தீர வேண்டுமென்று.
பாலா மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. மைனா அற்புதம். கலை வடிவிவங்கள் மனதிலிருந்து வரவேண்டும். அறிவிலிருந்து அல்ல. இளையராஜா அண்மையில் பேசும் போது 'இசை இதயத்திலிருந்து வரவேண்டும், மூளையிலிருந்து அல்ல' என்று சொன்னார். பாரதிராஜா ஒரு முறை பேசும் போது 'என் மனத்திரையிலிருக்கும் காட்சியை வெள்ளித்திரையில் கொண்டுவர முயற்சிக்கிறேன்' என்று சொன்னார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்தும். மைனா 'straight from the heart' என்று சில விமர்சனங்கள் பார்த்தேன். அதிலிருந்தே பிற படங்கள் 'from somewhere else (behind?)' என்று புரிகிறது. சில நாட்கள் முன் வெளிவந்த படத்த்திற்கு 'intelligent script writing' என்று விமர்சனம். என்னைப் பொறுத்தவரையில் அந்த படம் பக்கம் போகக்கூடாது என்று நான் முன்பே எடுத்த முடிவை பாராட்டிக்கொண்டேன் :D
மைனா வெறும் படம் தானே? அதுக் கூ......கூம் மேல சார்!
இந்த ஆண்டை 'மைனா' மூலம் தொடங்கியதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் :)
No comments:
Post a Comment